Thursday, 5 November 2015

தாந்த்ரீக பரிகாரங்கள் : அகத்தியர் அருளிய மூலிகை வசிய விநாயகர்

தாந்த்ரீக பரிகாரங்கள் : அகத்தியர் அருளிய மூலிகை வசிய விநாயகர்: அகத்தியர் தனது பரிபூரணம் 1200ல் கூறியுள்ள முறைப்படி மூலிகைகள் சேர்க்கப்பட்ட வலம்புரி விநாயகர், மற்றும் அகத்தியர் கூறியுள்ளபடி எழுதப்பட்டு ச...

Tuesday, 7 July 2015

செய்வினை மற்றும் பில்லி சூனியம் பற்றிய விளக்கங்கள்- பாகம் 2இந்த செய்வினை அல்லது இடு மருந்து கொடுப்பது என்பது பல கால காலமாய் இருந்து வருவது உண்டு. மேலும் தமிழகத்தில் ஒரு கிராமம் முற்றிலுமே இந்த தொழிலை செய்து வருவது பலருக்கு தெரிந்திருக்கும்.எதிரிக்கு வாரிசு இல்லாமல் போக, தொழிலில் நஷ்டம் வர, அடியோடு மாரணம் செய்ய,ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், கணவன் மனைவியை சேர்க்க பிரிக்க, காதலர்களை சேர்க்க பிரிக்க  என பல எதிர்மறை விஷயங்களுக்கு இவை பிரதானமாக பயன்படுகிறது . பல் வேறு வகை மூலிகைகளையும் இவற்றுக்கு பயன்படுத்தலாம். உதாரணமாக பின்துடரி , ஆடை ஒட்டி, வெல்லாடனை    போன்றவை மிக அதீத உடல் நசிவை தரக்கூடிய, செய்வினை பிரயோகங்களில்  உபயோகப்படுத்தும் மூலிகைகள். ஆங்கிலத்தில்  இவைகளை ' டாக்சிக் ஹெர்பல்ஸ்' என்பர். எவற்றை செய்தாலும் நஷ்டம், எதிலும்  தோல்வி, எவ்வளவு புத்திசாலிதனத்துடன் செய்தாலும் தோல்வி, எந்த கோவில் குளம் சென்று வந்தும் பலன் இல்லாத தன்மை, திடீர் என கடன் எனும் பெரும் குழியில் மாட்டி  கொள்வது போன்றவை தொழில் நசிவை மற்றும் அழிவை தருவதற்காக எதிரிகளுக்கு  செய்யப்படும் ஸ்தம்பன மற்றும் கொடிய ஆக்ரூஷன நிலைகள். பேய்மிரட்டி, நத்தை சூரி, தலைச்சுருள் , ஆதிக்கொடி, காட்டாடி, செந்தாளி போன்ற சிலவற்றை ஆக்ரூஷன மந்திர கட்டுகள் கட்டி காற்றில் வெளியிட்டால் அணைத்து நாச வேலைகளையும் செய்யும் . இது பற்றி மேலை நாட்டு ஆய்வுகள் பல ஆங்கிலத்தில்  உண்டு,  முக்கியமாக 'சிஷோபிரிநியா' எனப்படும் ஒரு வகையான மூளை  தொந்திரவு அனேகமாக இதில் சிக்கி  கொண்ட பலருக்கு  ஏற்பட்டு இருப்பதை கண்டு  வருகிறோம். ஆய்வுகளின் முடிவுகளும் மேற்கண்ட நோய் மற்றும் வயிறு மற்றும் சுவாச கோளாறுகள் மற்றும் கால் முட்டிகளில் கோளாறு போன்றவை பிரதானமாய்  ஏற்படுவதாக  தெரிவிக்கிறது. அடுத்ததாக இவை காலடி மண், நகம், உடுத்திய துணி போன்றவற்றை வைத்தும்   செய்யப்படுவது உண்டு-முக்கியமாக ஆண் பெண் சம்பந்தப்பட்ட அணைத்து விஷயங்களும் இம்முறையில் செய்யப்படுகிறது.ஆகையால் தான் வெட்டிய நகத்தை கீழே போடக்கூடாது, மற்றும் முடி உதிரக்கூடாது அப்படியே உதிர்ந்தாலும் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வெளியே சென்று வந்தால் கண்டிப்பாக கால்களை அலம்ப வேண்டும் எனவும் நம் முன்னோர்கள்  கூறி வைத்தனர். தற்போது இவற்றை இளைய சமுதாயம் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மலையாள மாந்த்ரீக முறைகளில் கடைபிடிக்கப்படும் யட்சிணி அல்லது சாத்தன் முறைகளில் நறுமண புகைகளின் மூலம் அவற்றை வசீகரித்து தேவைப்பட்ட மாந்த்ரீக காரியங்கள் சாதிக்கப்படுகின்றன . இதில் பல அதீத நுட்பங்களும் சூட்சுமங்களும் உண்டு. உதாரணமாக மரிகொளுந்து, சம்பங்கி  போன்றவற்றை பரவ விடும் பொழுது  அஷ்ட கர்மங்களில் ஒன்றான  வசியம் எற்படுத்தபடுகிறது. ஆக்ரூஷனம், உச்சாடனம் மற்றும் வித்வேஷனங்கள் செய்ய சாம்பிராணியுடன்,குங்கிலியம் மற்றும் மிளகாய்  சேர்த்து எரிக்கப்படுகிறது. தேவ கணங்களை வசீகரிக்க அரசன் குச்சிகள் எரிக்கப்படுகிறது. முக்கியமாக முதலில்  எந்த முறைப்படி பாதிக்கப்பட்ட நபர் கட்டுண்டு உள்ளார் என்பதை அறிய முற்பட்டு பின்பு எத்தனை காலமாய் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிந்து, அவரின் புற ஒளி தோற்றம் எதை குறிப்பிடுகிறது , உடலில் உள்ள சக்கரங்களின் நிலை  எவ்வாறு உள்ளது என பார்த்து அதற்கேற்றவாறு தீர்வு கொடுப்பது சிறந்ததாக இருக்கும். மனித உடலில் மஹா சக்தியான தனஞ்செயன் எனப்படுகிற
(தச வாயுவில் ஒன்று) காற்றின் சக்தி ஒளியை வெளிப்படுத்துகிறது. இறந்த உடலை அழித்து  மண்ணோடு கலக்கும் பொழுது வெளிவருவதும் இந்த தனஞ்செயன் என்கிற காற்று தான்  என்கிறார் திருமூலர்.  தனஞ்செயன் தவிர மற்ற ஒன்பது வாயுக்களும் நம் உடலின் ஒன்பது நாடிகளுக்குள் சென்று செயலாற்றுகிறது,எதிர்மறை சக்திகள் மற்றும் ஏவல் போன்றவை நம் உடலில் மட்டும் இல்லாமல் நம் வசிப்பிடம் மற்றும் வசிப்பிடத்தில்  உள்ள பழைய பொருட்கள், ஓடாத கடிகாரம், உபயோகமற்ற சாமான்கள் மற்றும் நாற்காலிகள் போன்றவற்றிலும்  படிந்திருப்பதை கண்டுள்ளோம். இதுவும் பெரியோர்கள் முன்பே  சொல்லி வைத்த விஷயம் தான். பழையன கழித்தல் அவசியம் இருப்பின், புதியன நல்லன புகும் என்று.

மிகவும் கூட்டமான நெரிசல்களில் அடிக்கடி பயணம் செய்வோர், ரயில் மற்றும் கூட்டமான பேருந்தில் பயணம் செய்வோர், மருத்துவமனை, தியேட்டர்  போன்றவற்றில் வேலை செய்வோர்களுக்கு 'Accidental Energy Transfer' எனப்படும் "தற்செயலாக உண்டாகும் எதிர்மறை சக்தியின்' பாதிப்புக்கள் இருக்கும்-பெரிய பாதிப்புக்கள் இல்லாவிட்டாலும் இனம் தெரியாத பயம்,மனச்சோர்வு, உடல் சோர்வு போன்றவை இவர்களை வாட்டி வரும். இவர்கள் அடிக்கடி 'ராக் சால்ட்' குளியல் செய்து வருவது அவசியம்.

நம் அனுபவத்தில் இவற்றை  எல்லாம் வரும் முன் காத்து கொள்வது தான் சிறந்ததாக தெரிகிறது.

இடு மருந்து பாதிப்பு இருப்பதாய் தோன்றினால் காலையில் வெறும் வயிற்றில் சூடான சாதத்துடன் வெள்ளை  பூசணியை சேர்த்து குழைய வேகவைத்து  உப்பு காரம் எதுவும் சேர்க்காமல் உண்டு பார்க்கலாம். பாதிப்புகள் இருப்பின் வாந்தி வந்து வெளியேறும்-ஆனால் இது மிகவும் சாதாரண முறை தான்.குறிப்பிட்ட நபரை நேரில் கண்டு விவரங்கள் அறிந்தால் மட்டுமே எவரும் முழு நிவாரணம் கொடுக்க இயலும். 

இதில் ஆட்பட்டு துன்பப்படுவோரும் மேலும் இதற்கு ஆட்படாமல் முன் கூட்டியே தற்காத்து கொள்ள எம்மிடம் வருவோரும் உண்டு.இதனால் பாதிப்புக்கள் இருப்பின் நிவாரணம் பெற 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா  சென்டர்' +919840130156 அணுகலாம். குறிப்பிட்ட சில மூலிகைகள் மூலம் நிவாரணம் அடையலாம்.

பேய் ஆவி போன்றவற்றை விரட்டும் மூலிகைகள் முறைகள் பற்றிய தகவல்களுடன் அடுத்த  பாகத்தில்  முற்றும்...
Tuesday, 30 June 2015

செய்வினை மற்றும் பில்லி சூனியம் பற்றிய விளக்கங்கள்-பாகம் 1

நம்  வேந்தர்  தொலைகாட்சி  பேட்டியை  அடுத்து  நேரில்  ஆலோசனைக்கு வந்தவர்களில்  90 சதவீதத்தினர் மேற்கண்ட செய்வினை ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அல்லது  பாதிகப்பட்டதாக மன  ரீதியான பயத்தால் வந்தவர்களே. இதை பற்றிய பல கால ஆய்வுகளுக்கு பின்  இவற்றை அறிவியல் ரீதியாகவும் நிச்சயமாக நிரூபிக்கமுடியும்  என்பதே எம் கருத்து. அப்படி முடிகிற விடயங்கள் மட்டுமே போலிகளை உடைத்து உண்மைகளை மட்டும் நிறுத்தி நீண்ட காலங்கள் நிலைத்து நிற்கும். சில ஜோதிட நண்பர்கள் இவைகளை ஜாதக ரீதியாக கால நேரத்திற்கு உட்பட்டால்  மட்டுமே செய்வினை செய்ய  முடியும் என கூறி வருவதுண்டு. எம் அனுபவத்தில் அப்படி இல்லாமலும்  அதாவது கால நேரத்திற்கு அப்பாற்பட்டும் இவைகளுக்கு ஆட்பட்டு   துன்பபடுவோர் பலர் இருப்பதை அனுபவ ரீதியாக பார்த்து வருகிறோம். இதில் மன ரீதியாக சில ஆன்மீக நபர்களால் தவறாக கூறப்பட்டு பயத்தில்  பல காலங்கள் மன ரீதியாக துன்பப்பட்டு வருபர்களும் அதிகம். விஷ போஜனம் என கூறப்படும் இடுமருந்து கொடுத்து செய்வினையால் ஆட்படுபவர்களுக்கு சிலர் சில பச்சிலை மருந்து கொடுத்து வாந்தி எடுக்க செய்து பின்பு செய்வினை விலகி விட்டது என கூறி அனுப்பிவிடுகின்றனர். மன ரீதியாக துன்பத்தில் இருப்போருக்கு  மட்டுமே இது நன்மை செய்யும். உண்மையில் கடுமையான இடு மருந்து பாதிப்பில்  உள்ளோருக்கு இவை வேலை செய்யாது. பல வருடங்கள் உள்ளே ஊறிய விஷத்தை, உடல் உறுப்புகள் அனைத்திலும் பரவிய ஒன்றை ஓரிரு நாட்களில் அல்லது சில மாதங்களில் எடுத்து விட முடியாது.இருந்தும் எம்மிடம் வருவோர் பலருக்கு உடனடி நிவாரணம் கிடைத்து வருவதற்கு காரணம், இவர்களுக்கு  எதிரிகளால் கொடுக்கப்பட்ட மருந்தின் வீரியமின்மை மட்டுமே. இது போன்ற பாதிப்புகளை நம் மகரிஷிகள்  மற்றும் சித்தர்கள் பல காலம் முன்பே பல் வேறு வகைளில் பிரித்து நமக்கு அருளி சென்றுள்ளனர். நல்ல வேலையாக அதில் பல மூலிகைகள் தற்சமயம் கிடைப்பதில்லை. ஆகையால் அவ்வளவு வீரியமான
மருந்தும்  பல காலம் தங்கி அழிக்கும் செய்வினை  செய்யும் மாந்த்ரீக நபர்கள் தற்காலத்தில் வெகு குறைவு. இவற்றில் மூலிகைகளின் மூலம் கொடுப்பது, யட்சிணி மற்றும் குட்டி சாத்தன் மூலம் செய்யும் கேரளா முறைகள், அரேபிய முறைகள் என பல் வேறு வகைகள் உள்ளன. அடுத்த பாகம் மேலும் பல தகவல்களையும் இதை பற்றிய நல்ல தெளிவான பார்வையையும் உங்களுக்கு கொடுக்கும். முடிக்குமுன் ஒரு பரிகார முறை..

பில்லி நீங்க : காட்டு சீரக இலைகளை சாறெடுத்து  பாதிக்கப்பட்டவரின் உடல் முழுதும் தடவ வெகு சில நாட்களில் பாதிகப்பட்டவரின் உடல் எரிச்சல், கண் வீக்கம், சொறி சிரங்கு மற்றும் வேறு உபாதைகள் குணமாகி நலம் பெறுவர்.

மற்றவை அடுத்த பாகத்தில்.. 

Tuesday, 30 December 2014

வாழ்வை வளமாக்க ஆன்மீக பரிகார பொருட்கள்

விலை விவரங்களுக்கு தொலைபேசியில் மட்டுமே அழைத்து தெரிந்து கொள்ளவும். கருத்து பெட்டியில் கொடுக்க இயலாதுMonday, 20 October 2014

சகலமும் வசியமாக பழங்கால முறை


சுத்தமான கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன் கலந்தும், திங்கள் வியாழன் நேய்யுடன் கலந்தும், செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும் மையாக இட்டு செல்ல அனைத்தும் வசியமாகும்.வேண்டிய காரியம் சித்திக்கும்.

வியாபார வெற்றிக்கு புருவ திலகம்


ஒரு வெள்ளி விளக்கில் பௌர்ணமி அன்று காராம் பசுவின் நெய்யை விட்டு தாமரை பஞ்சுதிரி போட்டு விளக்கேற்றி ஒரு சங்கை அதில் கவிழ்த்து பிடித்தால் சங்கில் மை கட்டும். அந்த மை எடுத்து அத்துடன் ஜவ்வாது,பட்சை கற்பூரம்,புனுகு,கோரோசனை சேர்த்து குழைத்து வெள்ளி டப்பியில் வைத்து தொழில் வியாபாரம் செய்ய, மற்றும் எங்கு செல்வதானாலும் மையை புருவத்தில் வைத்து செல்ல காரிய பலிதம் உண்டாகும்.

ரகசியமாய் வைக்கபட்டுள்ள ஜன வசியம்


வசியத்தில் ஜன வசியம், தன வசியம்,சத்ரு வசியம்,ஸ்த்ரீ (பெண்) வசியம், புருஷ (ஆண்) வசியம், மிருக வசியம், தேவவசியம்,லோக வசியம்,ராஜ வசியம்,மூலிகையினால் வசியம், யந்திரத்தினால் வசியம் என பல உள்ளது. இங்கே கொடுக்கபட்டுள்ளது பொதுவான ஆனால் சக்தி வாய்ந்த ஒன்றாகும்.ரகசியமாய் வைக்கப்பட்டிருக்கும் ஒன்றும் ஆகும்.
கோரோசனையுடன், மச்ச கல், சிறுதேன் என அழைக்கப்படும் புற்றுதேனையும் சேர்த்து இழைத்து நெற்றியிலோ, உள்ளங்கால்களிலோ தடவிக்கொண்டு செல்ல, நமது எதிரிகள் முதற் கொண்டு சகலரும் வசியமாவார்கள். இது அனுபவத்தில் கைகண்ட முறையாகும். இதற்கு அளவு முறை ஏதும் இல்லை.அவரவர் தேவைக்கேற்ப்ப செய்து கொள்ளலாம்.
கோரோசனையை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.மச்ச கல் என்பது கடலில் வாழும் சுறா மீன் வகைகளில் மிக அபூர்வமாக அதன் தலை பகுதியில் கிடைக்க கூடிய ஒரு கல் ஆகும். புற்று தேன்-இது மண் குடிசை கரையான் புற்று போன்ற இடங்களில் சிறிய கொசுவை போல உள்ள தேனீக்களால் கட்டப்படும் கூட்டில் கிடைக்கும் தேன். இந்த கூடுகளில் அதிகபட்சம் 50 முதல் 100 மில்லி வரை தான் தேன் இருக்கும். கொசுததேன் எனவும் இதை கூறுகிறார்கள். (எங்கள் தேவைக்கு மலை மற்றும் வன பகுதிகளில் வாழும் மக்களின் மூலம் பெறுகிறோம்) 

'சகல சித்தி வசிய திலகம்'


தொடர்ந்து பலர் மேற்கண்ட திலகம் (மை) பற்றி தேவை என கேட்டு கொண்டே இருப்பதால் முதலில் ஒரு 50 நபர்களுக்கு வரும் படி மேற்கண்ட மை தயார் செய்யப்படுகிறது.19.5.14 திங்கள் முதல் இதற்கான விருப்பம் மற்றும் கட்டணம் செலுத்துபவர்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற முறையில் கொடுக்கப்படும். கட்டணம் செலுத்தும் அனைவரும் கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
(1) தங்களின் பிறந்த தேதி,முழு பெயர்,பிறந்த நேரம்,பிறந்த ஊர்-நான்கும் தேவை
(2) மேற்கண்ட மை சிறிய அளவே இருக்கும்-உதாரணமாக சாதாரண ஐடெக்ஸ் மை டப்பாவில் பாதி அல்லது 40% இருக்கும்.
(3) தினசரி உபயோகிக்காமல் அவசிய தேவைகளுக்கு உபயோகித்தல் பல விதங்களில் பலனும், பயனும் தரும்
(4) மேற்கண்ட திலகத்தை தவறான செய்கைகளுக்கு பயன்படுத்த கண்டிப்பாக மிக மோசமான பின் விளைவுகள் வரும்.
(5) கணவன் மனைவி பரஸ்பர தேவைகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.
(6) சாதாரண திலகம் போல் எப்போதும் நெற்றியில் வைத்திருக்க கூடாது. தேவை படும் போது மட்டும் உபயோகிக்கவும். முக்கியமாக கணவன் மனைவி உறவுகளுக்கு அல்லாமல் வேறு தன, தொழில்,கடன் அல்லது வேறு விஷயங்களுக்கு உபயோகிப்பவர்கள் கண்டிப்பாக வீடு சென்றவுடன் அழித்து விட வேண்டும். இரவில் அணிய கூடாது.
(7) எல்லாவற்றிற்கும் மேலாக, மிக மிக அதீத நம்பிக்கை உடையவர்கள் மட்டும் முயற்சி செய்யவும். பரிசோதனை, எதிர் மறை எண்ணமுள்ளவர்கள் தேவையில்லாமல் பணத்தை வீணாக்காதீர்கள். எதிர் மறை எண்ணமுள்ளவர்களை கடவுளாலும் காப்பாற்றுவது கடினம் என்பது என் கருத்து.
(8) இதில் கொடுக்கப்பட்டதற்கு மேல் வேறு எந்த விவரங்களும் இல்லை. மேற்கண்டவற்றை நன்றாக படித்து புரிந்து கொள்ளவும்.பலன்கள் நபருக்கு நபர் மாறுபடும்.வைத்தவுடன் வாழ்க்கையே தலை கீழாக மாற்றி போட இது விட்டலாச்சாரியர் படம் இல்லை. அகத்தியர் மற்றும் கோரக்க முனிவர் கூறியபடியான முறைகளை மிக கடுமையான அனுஷ்டானங்களை கையாண்டு தான் தயாரிக்கப்படுகிறது.


தேவைக்கு : +919840130156 / +919952045723

தன ஜன வசீகரம் செய்யும் "ஹத ஜோரி"


ஹத ஜோரி மற்றும் ஹத ஜோடி என அழைக்கப்படும் மூலிகையானது மிகவும் அபூர்வமான ஒன்று மட்டுமல்ல-காண்பதற்கு அரிதும் கூட.இதன் மொத்த உயரமே 1-2 இன்சு மட்டுமே. மத்திய பிரதேச மாநிலம் மற்றும் நேபால் பள்ளத்தாக்குகளில் விளையும் இது-தாந்த்ரீகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். பண மற்றும் ஜன வசியத்திர்க்கு பிரசத்தி பெற்ற ஒன்றும் கூட. இந்த செடியின் பெயர் "பிர்வா" என அழைக்கப்படுகிறது. மிக அதிகமான எம் தேடுதலுக்கு பிறகு யாம் தெரிந்து கொண்ட விஷயம்-தமிழில் இதற்கு "புலி நகம்" மற்றும் "காக்கா மூக்கு செடி","தேள் கொடுக்கி" என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இதன்
வேரானது மனித கைகள் இரண்டும் கை கூப்புவது போல் இருப்பதால் இதற்கு ஹிந்தியில் மற்றும் தாந்த்ரீகத்தில் "ஹத ஜோடி" என அழைக்கப்பட்டு வந்தது.தாந்த்ரீகத்தில் - இதை உடன் வைத்திருந்தாலே நடக்க முடியாத காரியம் என்று எண்ணி இருந்ததெல்லாம் நடந்து முடியும் என கூறப்படுகிறது. மேலும் எவ்விதமான பயத்தையும் போக்கி மனிதனில் வசீகர சக்தியை ஏற்படுத்தும் இது.
தாந்த்ரீகத்தில் இதன் பெருமைகளாக : பயத்தை போக்கும், பணத்தை வசீகரிக்கும், மனிதர்களை வசீகரிக்கும், விபத்துக்கள் ஏற்படாமல் காக்கும் மற்றும் இதை வைத்திருப்போரை அதிர்ஷ்டசாலி ஆக்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மாவட்டங்களின் குக்கிராமங்கள் மற்றும் தாந்த்ரீகத்திற்கு பெயர் பெற்ற சட்டீஸ்கார் மாநிலம் போன்றவற்றில் இது மிக பிரபலம். சாமுண்டீஸ்வரியின் தோற்றமாக இது கூறப்படுகிறது. பல காலமாக உண்மையான "ஹத ஜோடி" யை தேடி வந்தோம்.சமீபத்தில் கிடைத்தது எமக்கு மிகவும் மகிழ்ச்சி. தெய்வீகமான இதை முறையாக உபயோகிப்பவருக்காக 11 எடுத்து வைத்தோம். தற்போது 6 மட்டுமே உள்ளது. தேவைப்படுபவர்கள் அழைக்கலாம். கருத்து பெட்டியில் விலை கேட்க வேண்டாம் மற்றும் இதை வியாபார பொருளாக பார்க்க வேண்டாம் என கேட்டு கொள்கிறோம். கஷ்டத்தில் உள்ளோர் பயன் பெறட்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்த பதிவு இடப்படுகிறது. இதன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. 

தேவைக்கு : +919840130156 / +919952045723

Saturday, 4 October 2014

சப்த ஆகர்ஷன சக்தியை பெறும் பயிற்சி முறைநாடு விட்டு நாடு, கண்டங்களை தாண்டியும் பிறர் பேசுவதை, நினைப்பதை அறியும் முறையே சப்த ஆகர்ஷன முறை எனலாம். எனக்கு தெரிந்த ஒருவர் வெறும் கைகளை பிடித்து கொண்டே நாம் முதல் நாள் உண்ட உணவுகளை முதற் கொண்டு கூறுவார் !! தற்சமயம் நினைப்பதை கூட கூறிவிடுவார் !! இது போன்று சிலருக்கு பிறவியிலேயே தூரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வது போன்ற திறன் இருக்கும்.கர்ண யட்சினி,வாக்குவாலை உபாசகர்களுக்கு இது எளிதில் சித்தியாகும். சப்தாகர்ஷய மந்திரம் ஜெபிப்போர்க்கும் இது கைகூடி வரும்.நான் இவற்றை பயிற்சியின் மூலமே பெற்றேன். இங்கு கொடுக்கவிருப்பது வேறு ஒரு எளிய பயிற்சி முறை. சரியாக கடைபிடித்தால் கண்டிப்பாக சித்தியாகும். பல நன்மைகளை பெற முடியும். மேலும் இதை நல் வழிக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். சிறிய விசயங்களுக்கு உபயோகப்படுத்துவது, மற்றும் தன்னால் எதுவும் அறிந்து கொள்ள முடியும் என பிறருக்கு தெரிவிப்பதற்காக பகட்டு செய்வது போன்றவை இருப்பின், சக்தி இழப்பு ஏற்படும். இதை பலரிடம் நான் கண் கூடாக கண்ட ஒன்று. கவனம் தேவை. 

கைக்கு அடக்கமான வெடிப்பு, கீறல் இல்லாத நல்ல வெண்மை நிறம் கொண்ட வலம்புரி சங்கை பேரம் பேசாமல் வாங்கி கிழக்கு முகமாக உட்கார்ந்து வெள்ளை துணி விரித்து அதில் சங்கை வைத்து அதன் முன் நிமிர்ந்து உட்காரவும். பின்பு சங்கை வலது கையில் வைத்தவாறு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்-மனதினுள்ளே !! மொத்தம் ஒரு லட்சம் முறை உருவேற்ற வேண்டும் !! தினமும் செய்யலாம். முதல் நாள் செய்த நேரத்திலேயே ஒவ்வொரு நாளும் மந்திரம் உச்சரிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் முடித்து விட வேண்டும்.  

சப்தாகர்ஷிணி மந்திரம் :

ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய 
சப்தாகர்ஷிணி ஆகர்ஷய ஆகர்ஷய 
வா வா சுவாகா  : 

ஒரு லட்சம் உருவேற பின்பு தான் நம் உடலின் நரம்பு மற்றும் சுவாசங்களில் கூட நிரந்தரமாக மந்திரம் பதியும்.

90 நாட்கள் முடிந்ததும் இதே போல் வெள்ளை விரிப்பின் எதிரே அமர்ந்து சங்கை எடுத்து காதில் வைத்து, நீங்கள் விரும்பும் இடம்,நபர்,செய்தி போன்றவற்றை நினைத்து கவனம் செலுத்தவும். சங்கை வலது காதில் சங்கின் மேற்பகுதி காதின் மேல்புரத்திலும் சங்கின் கீழ் பகுதி காதின் அடிபாகத்திலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். கண் மூடியவாறே கவனம் செலுத்தவும் !! முதலில் கர கர என கேட்டு பின்பு குரல்கள் கேட்க ஆரம்பிக்கும். இதன் பலன் நபருக்கு நபர் மாறுபடும். நம்பிக்கை மற்றும் ஆர்வம் அவசியம் !! தினமும் 15  நிமிடங்கள் தவறாது பயிற்சி செய்ய விரைவில் மேற்கண்ட முறை சித்தியாகும்!! Wednesday, 1 October 2014

அஷ்ட கர்மங்களில் 'மோஹனம்' அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. மோஹனத்தில் பல முறைகள் உள்ளன. அவற்றில் மிக எளிய முறையான சிலவற்றை கொடுத்துள்ளேன். அனைத்தும் முன்னோர்கள், மஹரிஷிகள், சித்தர்கள் அருளியவை. சக்திவாய்ந்தவை. பரிசோதிக்கப்பட்டவை. இதன் உபயோகம் நல் வழிக்காக இருந்தால் மட்டுமே பலன் தரும்.தகாத மற்றும் விருப்பமில்லாத ஆண் /பெண் மோஹம், அடுத்தவர் சொத்தை அபகரிக்க போன்ற தீய விஷயங்களுக்கு உட்படுத்த முயற்சித்தால் மிக கடுமையான எதிர் விளைவுகள். கவனம் தேவை.

மூல மந்திரம் : 

"ஓம் நம:சர்வலோக மோஹனம் குரு குரு ஸ்வாஹா " 

மேற்கண்ட 16 அட்சர மந்திரத்தை தினசரி முறையான படி உட்சரித்து வரவும். 16,000 முறை உட்சரித்ததும் சித்தியாகும். பின்பு இதை கொண்டு கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு முறையை உபயோகிக்கலாம். வியாபாரத்திற்கு, கணவன்-மனைவி அன்பிற்கு, இழந்த உறவுகளை மீண்டும் பெறுவதற்கு, எதிரிகள் தொல்லை அடங்க போன்ற விசயத்திற்க்கு இந்த வசிய முறையை உபயோகிக்கலாம். தீயவைக்கு அதாவது தஙகள் நன்மைக்கும் மற்றோருக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்தால் சர்வமும் நாசமாகும்-எச்சரிக்கை தேவை. 

(1) துளசி விதையுடன் சஹதேவி மூலிகையும் சேர்த்து அரைத்து ஞாயிறு அன்று காலை 6-7 அளவில் திலகமாக நெற்றியில் சித்தியான மந்திரத்தை கிழக்கு முகமாக நின்று 108 முறை கூறி பின்பு நெற்றியில் இட்டு கொள்ள சகலரும் வசமாவர்.

(2) அத்தி மர பூவை திரியாக்கி இரவில் வெண்ணை / நெய் விட்டு கொளுத்தி அந்த மையை நெற்றியில் புருவத்தில் இட்டு கொள்ள எதிரியும் வசமாவார். 

(3) வில்வ இலையை எடுத்து வந்து நிழலில் உலர்த்தி, பின்பு காராம் பசுவின் பால் சேர்த்து குளிகையாக்கி வைத்து திலகமா இட்டு கொள்வது தன வசியம் செய்யும் முறையாகும். 

(4) சிந்தூரம், குங்குமப்பூ, கோரோசனை இவை மூன்றையும் நெல்லி சாற்றை விட்டு அரைத்து திலகம் இட ஜன வசியம். 

(5) வெள்ளை வசம்பு, சிந்தூரம் இவற்றை தாம்பூல சாற்றில் குழைத்து திலகம் இட்டு செல்ல லோக வசியம் ஏற்படும். 

ஒவ்வொரு முறை திலகம் நெற்றியில் இட்டு கொள்ளும் போதும் கிழக்கு முகமாக நின்று 108 முறை சித்தியான மந்திரத்தை கூற வேண்டியது அவசியம். மந்திர உருவேற்றம் நிகழும் நாட்களில் மது,தாம்பத்திய உறவு,புகை,புகையிலை பொருட்கள் அசைவ உணவு நீக்கினால் மட்டுமே பலன் தரும். 

எலுமிச்சையில் மாந்திரீகம்தேவ கனி என்று கூறப்படும் எலுமிச்சையில் அனைவரும் செய்ய கூடிய முறையில் ஒரு மாந்திரீக பயிற்சியை இங்கே வழங்கி  உள்ளேன். இதன் பலன் : மாந்திரீக பயிற்சி முறை முடிந்ததும் அந்த எலுமிச்சையை தன்னுடனே வைத்திருக்க சகல காரிய சித்தியும் உண்டாகும். 

இதை வெள்ளி கிழமை காலை 6:15 க்கு ஆரம்பிக்கவும்.குளித்து வெள்ளை நிற அதை அணிந்து இருக்க வேண்டும். பெண்கள் வெள்ளை நிறம் கலந்த உடைகள் அணியலாம்.காமாட்சி விளக்கில் நல்லெண்ணை தீபமேற்றி ஒரு மர ஸ்டூலில் அல்லது மனையில் கிழக்கு முகமாக வைக்கவும். விளக்கில் இருந்து நாலடி தள்ளி தர்ப்பை புல் பாய் விரித்து அதில் மேற்கு பார்த்தவாறு அமராவும். வலது கையில் எலுமிச்சை கனியை வைத்து கொண்டு (கனியை பேரம் பேசாமல் வாங்க வேண்டும்-கனியில் கருப்பு புள்ளிகள் இல்லாமல் பார்த்து கொள்ளவும்) தீப ஒளியை பார்த்தவாறே அகத்தியர் மந்திரமான " ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய தேசிப்பழம் ஆகர்ஷய வாவா ஸ்வாகா" என 108 முறை ஜெபம் செய்து கனியை விளக்கின் பாதத்தில் வைக்கவும். மீண்டும் விரிப்பில் அமர்ந்து இடது கையை விரித்து அதில் வலது கையை வைத்து கண்களை மூடி புருவ மத்தியில் ஒரு நிலைப்படுத்தி அதே மந்திரத்தை முடிந்த வரை தியானிக்கவும்.சுமார் 15 நிமிடங்கள் அவ்வாறு செய்து முடித்ததும் எழுந்து விடலாம். அதே கனியை வைத்து கொண்டு தினசரி கூறியுள்ள நேரத்தில் தொடர்ந்து 90 நாட்கள் செய்து வர மந்திர சித்தி உண்டாகி விடும். 90 நாட்களுக்குள் விளக்கு பாதத்தில் வைத்த பழம் நகர்ந்து நம்மிடம் வந்து சேரும். இது 45 நாட்களிலேயே கை கூடி விட்டால் கூட மேற்கண்ட பயிற்சியை நிறுத்தி கனியை வைத்து கொண்டு தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம். இந்த மந்திர பயிற்சியில் கனி வாடி கனத்து போகுமே அன்றி அழுகி விடாது. கையில் வந்து சேர்ந்த கனியை அடுத்த 60 நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். ஒரு முறை மந்திரம் சித்தி ஆகிவிட்டால் பின்பு ஓரிரு நாட்களிலேயே அடுத்து செய்தால் கனி கைகளில் சேர்ந்து விடும். மிக உபயோகமான சக்தி வாய்ந்த முறை இது. பயிற்சி நாட்களில் மது,மாது,மாமிசம்,புகை போன்றவை அறவே கூடாது. பொதுவாக இந்த மந்திரம் 1.25 லட்சம் முறைகள் உருவேற்றி விட்டால் மந்திரம் நம்முடனே இருந்து தேவையான சமயத்தில் யாருக்காக வேண்டுமானாலும் இதை செய்து கொடுக்கலாம். சுபம் உண்டாகும். 

Thursday, 11 September 2014

நினைத்தது நடக்க

மிருகஷீச நட்சத்திரத்தில் புளிய மர புல்லுருவிக்கு காப்பு கட்டி எடுத்து கையில் கட்டி கொள்ள போட்டி,பந்தயம்,ரேஸ்,லாட்டரி  இவற்றில் வெற்றி கிடைக்கும்.

ரேவதி நட்சத்திரத்தன்று நாவல் மர புல்லுருவிக்கு காப்பு கட்டி எடுத்து கையில் கட்டி கொள்ள எதிர்பாராத பண வரவு ஏற்படும்.

சுவாதி நட்சத்திரத்தன்று எலுமிச்சை மரத்திற்க்கு காப்பு கட்டி எடுத்து பணம்,பொன் போன்றவை இருக்கும் இடத்தில் வைக்க அவைகள் இரட்டிபாகும்.

பரணி நட்சத்திரத்தில் இலந்தை மர புல்லுருவிக்கு காப்பு கட்டி எடுத்து கையில் கட்டி கொள்ள நினைத்தது நடக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் புளிய மர புல்லுருவிக்கு காப்பு கட்டி எடுத்து கையில் கட்டி கொள்ள சகலமும் வசியமாகும்.

அரச மர புல்லுருவிக்கு ரோகிணி நட்சத்திரத்தில் காப்பு கட்டி எடுத்து வீட்டில்/வியாபார இடத்தில் வைக்க நிரந்தர பண வரவு ஏற்படும்.

 

Friday, 5 September 2014


குபேர சாவி

வட மாநிலங்கள் மற்றும் ஆந்திராவில் மிக பிரபலமான 'குபேர சாவி' யானது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய ஒன்றாகும். இதை வியாபாரம் மற்றும் வீடுகளில் பூஜை அறை அல்லது பணப்பெட்டியில் வைத்திருக்க எதிர்பாராத பண வரவு இருந்து கொண்டு இருக்கும். தற்போது இது நம் "ருத்ர பரிஹார் ரக்‌ஷா ஸென்டர்' ல் குறைந்த அளவு வந்துள்ளது.சிறியது ரூ.600/-. தேவைக்கு +919840130156

வலம்புரி சங்கின் மகிமைகள்


கண் திருஷ்டி நீங்க காலையில் குளித்து விட்டு வலம்புரி சங்கில் தண்ணீர் வைத்து அதில் தேவதாறு,அகில்,சந்தனம்,கோஷ்டம்,துளசி,வில்வபொடி,ஏலம்,கோரோசனை,பச்சை கற்பூரம்,குங்குமப்பூ ஆகியவை சேர்த்து வைத்து பூஜையில் வைத்து பின்னர் அதில் சிரித்து அருந்தி விட்டு வீடு முழுதும் தெளித்து விட திருஷ்டி,போட்டி,பொறாமையால் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் விலகும். 

நவகிரகங்களுக்கு 27 வாரம் சனிக்கிழமைகளில் வலம்புரி சங்கில் பசுவின் பாலை கொண்டு பூஜிக்க அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.

விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள கிணற்று அருகில் இந்த சங்கில் பால் வைத்து பூஜித்து, பூஜை முடிந்ததும் பாலை கிணற்றில் ஊற்றி விட்டு ஒரு மஞ்சள் துணியில் வெற்றிலை,பாக்கு,பச்சரிசியுடன் இந்த சங்கையும் சேர்த்து ஒருவருக்கும் தெரியாமல் கிணற்றருகில் புதைத்து வைத்தால், விளையாத காட்டிலும் வேளாண்மை பெருகும். 

சிறிய வலம்புரி சங்கில் 108 எடுத்து மாலையாக்கி   அதில் விநாயகர் மந்திரம் மற்றும் மஹாலக்ஷ்மி மந்திரம்
(இவர்களின் எந்த மந்திரமானாலும் ஜெபிக்கலாம்) தினசரி இதில் ஜெபம் செய்து மாலையாக அணிந்து வர பண வரவு பெருகும். 

Thursday, 4 September 2014

மந்திரித்த முடிக்கயிறுகள்பல கோவில்களில், தர்காக்களில், மாந்திரீகர்களிடத்தில் பலர் மந்திரிக்கப்பட்ட முடிக்கயிறுகளை வாங்கி அணிந்திருப்பதை காணலாம். தேர்ந்த மந்திர உபாசனை உள்ளவர்கள் கொடுத்தால் மட்டுமே இது வேலை செய்யும். இதை பற்றி நன்கு ஆராய்ந்திருக்கிறேன். சிலர் இதனால் பயன் இல்லை என்று அறியாமையில் சொல்வதுண்டு. இதற்கு அறிவியல் ரீதியாகவும் விளக்கம் கொடுக்க என்னால் முடியும். நமது கைகளில் உள்ள நாடியில் தான் உடலில் உள்ள வாதம்,பித்தம், கபம் போன்றவற்றை அறிய முடியும்.மேலும் நாடியில் கிரகங்கள் சூரியன்,சந்திரன் மற்றும் குரு அமைந்துள்ளன. ஆகவே சிகப்பு,வெள்ளை, மஞ்சள் போன்ற முடிக்கயிறுகள் நம் நாடியில் பட்டு வர பல்வேறு பலன்கள் உண்டாகும். சிகப்பு அனுமனுக்கும் உகந்தது,மேலும் உடல் கோளாறுகள், மன கோளாறுகள் நீக்குவதிலும் இது சிறந்த பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட வண்ணத்தை குறிப்பிட்ட தேவைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து தேவையான பீஜ மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரித்தவாரே முடி போடுதல் தான் முடிக்கயிறு. இதன் மூலம் பல காரியங்களை செய்ய முடியும். கருப்பு நிற கயிறு திருஷ்டி, குழந்தைகளின் தோஷங்கள், கிரக தோஷங்கள் மற்றும் செய்வினை போன்றவற்றிற்கும், சிவப்பு நிற கயிறு பல வித சித்து,வசியம் மற்றும் அதிர்ஷ்டத்திற்கும் உபயோகப்படுத்தலாம். தெய்வீக சக்திகளை பெற, சுபமுண்டாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கயிரும்,வெள்ளை உடலில் சக்திகள் விரயமாகாமல் தடுப்பதற்கும் பயன் படுத்த வேண்டும். சித்தர்கள், மாமுனிகள் பல முன்னோர்கள் புஜத்தில், கழுத்தில் மற்றும் கணுக்காலில் முடிக்கயிறுகள் உபயோகித்து வந்ததை நாம் யாவரும் அறிந்திருப்போம். 36,108,1008 என பல்வேறு எண்ணிக்கையில் முடிக்கயிறு இடலாம். இவற்றின் சக்தி குறிப்பிட்ட  கால அளவே இருக்கும்.பின்பு மாற்றி விட வேண்டும்.சூரிய உதயத்திற்கு முன் விடிகாலையில் சுத்தத்துடன் கட்டுபவரும், கட்டப்படுபவரும் வடக்கு முகமாக நின்று கட்ட சக்தி மிகும்.கிரகங்களுக்காக கட்டி கொள்வதென்றால் ஞாயிறு சிகப்பும், திங்கள் கிழமை வெள்ளையும்,வியாழக்கிழமை மஞ்சளும் நாமே கட்டி கொள்ளலாம்.பலன் தரும். இது போன்று விபூதி, குங்குமம் போன்றவற்றில் சக்திகள் ஏற்றி கொடுப்பதும் முறையில் உள்ளன. 

Tuesday, 2 September 2014

ஓம் கங் கணபதையே நமஹ !! 
ஓம் க்ரீம் காளியை நமஹ !! 
ஓம் சத்குரு சாய்நாதாய நமஹ !! 
ஓம் ஸ்த்ரீம் தாராயை நமஹ !! 
ஓம் நமசிவய !! 


மந்திரங்களின் மூலமும் வேறு சில கைங்கரியங்களின் மூலமும் அனைத்து உயிர்களும் அமைதியோடும், இன்பமாகவும் வாழ வழி செய்வதே இந்த வலைப்பூவின் நோக்கம். மேலும் நம் முன்னோர்கள் அருளி சென்ற பல்வேறு அதீத சக்தி வாய்ந்த மந்திரங்கள் மற்றும் மாந்திரீக முறைகளையும் அனைவருக்கும் அறிய வைக்க செய்யும் சிறு முயற்சியும் ஆகும். நம் நாட்டின் மாந்திரீகம் மட்டுமில்லாமல் அரபி,சீனா மற்றும் திபெத்திய, கிரேக்க வழி முறைகளும் விளக்கப்படும்.முயற்சியுடைவார்கள் மற்றும் அதீத நம்பிக்கையுடன் தொடர்ந்து கடை பிடிப்பவர்களுக்கு வெற்றிகள் குவியும் !!! வாழ்க வளமுடன் !!